Sale!

ஆதியோகப் பேரின்ப வாழ்வு – நூல்: 3 (நிலை:3 -முத்திறமுத்திரைநிலை) யோகம்பழகும் நெறிமுறைகள்

Original price was: ₹600.00.Current price is: ₹566.00.

தலைப்பு ஆதிநாத பரமஹம்ஸர் மா
ஆசிரியர்கள் யோகம் &தத்துவம்
வகை கவிதைகள்
பக்கங்கள் 192
பதிப்பு 1
ISBN 978-81-988402-8-8
வடிவம் Hard Back
மொழி தமிழ்
பதிப்பகம் அறந்தைதமிழ்ச் சங்கம்
Category:

நன்னெறி முறையற்ற எண்ணம் சொல் செயல்களால் உடல் மனம் ஆன்மா முதலியவை இழிநிலையை அடைகின்றன.ஆரோக்கியமும் அதோடு கூடவே ஞானமும் பெருகப்பெருகத்தத்துவம் ‘கடத்தல்’ என்னும் அரிய செயல் எளிதில் கைகூடுகின்றது.

ஒருவர் தனது உடல் மனம் ஆன்மா முதலியவைகளைமுறையாகக் கடக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.விழிப்புணர்வுடன் அறிவாகிய ஜீவனை அறிந்து தரிசித்து, அதைக் கொண்டதனால் நாம் பெறும் நினைவே நினைவாற்றல் ஆகும். முழுமையான ஆன்மீக வாழ்விலும், லௌகீக வாழ்வு என்னும் இல்லற வாழ்விலும், நாமும் நம்மைச் சார்ந்தோரும் ஆனந்தம் அனுபவிக்க இதுவே ஆதாரமாகும்.

நினைவாற்றல் மிகுந்திடும்போது ஞானமும் மெய்ஞ்ஞானத்தெளிவும் சித்திக்கின்றன. இவையே மெய்யுணர்வு என்னும் பேரின்பப்பேறு பெற்று நிலைக்க இடம்தரும் தளமாகும். ஆரோக்கியம், சீரான நினைவாற்றல் மற்றும் பேரானந்தப் பேறு முதலிய அடிப்படைத்  தேவைகளைஅடைதல்  மனிதனாகப் பிறந்த அனைவருடைய உரிமையும் கடமையும் ஆகும்.

இவற்றைப் பெற்றுக்கொள்வதில்  நடைமுறையில் ஏற்படும் தடைகளைத் தாண்டி,  சரியானதை  உணரும் போது மெய்யுணர்வாகிய வெற்றியின் விதை நம் கைவசமாகிறது. அந்த உணர்வைப் பெற்று சரியானதை மட்டும் அனுபவித்து வாழும் போது அவ்விதை முளைத்துத் தழைத்து விருட்சமாக வளர்கின்றது.

சரியான அறிவையும் நினைவையும் நாம் அடைந்ததும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேறி பேரின்ப வாழ்வு எனும் வீடுபேறுநிலை  உறுதியாகின்றது.இறைவனை அடைவது, இறைநிலையோடு கலப்பது, அங்கே உண்டாகும் அந்த ஆனந்த நிலையிலேயே மூழ்கித் திளைப்பது, பேரின்பம் அனுபவிப்பதுஎன்பவை யெல்லாம் நமது நினைவோடு தொடர்புடையவைஆகும்.

தாஸமார்க்கம், சத்புத்திர மார்க்கம், சகமார்க்கம் மற்றும் சன்மார்க்கம் முதலிய பல வழிகளையும்; பல சமயங்களையும் மதங்களையும்; பக்தி யோகம், கர்மயோகம், குண்டலினி யோகம், ராஜயோகம், ஹதயோகம்,  அஷ்டாங்க யோகம் மற்றும் ஞான யோகம் முதலிய பல நெறிகளையும் வகுத்து; முன்னோர்களும் ஞானியர்களும் மொழிந்து அருளியவை எல்லாம் மனு மக்கள் மோட்சம் என்னும் முக்தி அடைவதற்கேதான்.

மேலும்,  இவ்வாறு மோட்சம் அடைதல், அடக்கம் ஆதல், கைலாயம் வைகுண்டம் விண்ணரசு மெஹராஜ் முதலிய மேலவளநாடுகளுக்குச் சென்று சேர்தல், ஜீவப்பிரயாணம் ஆதல், முக்தி அடைதல், சமாதி நிலைபெறல் எனவும், இன்னும் வேறு பலவாறெல்லாம் சொல்லப்பெறும் வாசகமொழிகள் எல்லாம், இங்கே இந்த வையகத்திலேயே பேரின்பவாழ்வைப் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்வு என்பதைக் குறிப்பனவேதான்.

மரணத்திற்குப்பின் புதிதாகப் பெறுபவை அல்ல. அல்லவே அல்ல என்பதை முதலில் அறிக.

இங்கே பெற்று அனுபவித்து வாழும் இந்த வாழ்வுதான் மரணத்தின் போது நிரந்தரமானதாக நிலைப்பிக்கச் செய்யப்படுகின்றது. எனவேதான் இத்தகைய பேரின்ப வாழ்வை மரணமில்லாப் பெருவாழ்வு என்றும் மெய்ஞ்ஞான மகத்துக்கள் வேதங்களில் அருளிச்செய்துள்ளார்கள்.

இதுவரை வெளிவராத பல தேவ இரகசியங்களைவிளக்கியும், மெய்யைப் பகுத்துப் பேசியும், யோகத்தின் இறுதி இன்ப நிலையாகிய சமாதி நிலையை அடையும் நுண்கலையை, முதன்முதலாக முழுமையான யோக வழிமுறையிலும் இந்த நூல்வரிசை கற்பிக்கின்றது.

அரசியல், வியாபாரம், மொழி மற்றும் பிற சார்ந்த உயர்வு-தாழ்வு-உரிமை அபிமானங்கள் ஏதுமின்றி, எழுவகைத் தோற்றத்தின் உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இந்தப்பேரண்டமும் பிரபஞ்சமும் உரிமையானது என்ற உணர்வுடையோர், இயற்கையின் ஒழுங்கை உணர்ந்து  இப்பேரின்ப நிலையை எளிதிலடைவது உறுதி.

விரும்பிவாசிப்பவர்கள்அனைவரும் “ஆதியோகப் பேரின்ப வாழ்வு” நூல் வரிசையின் முத்திறமுத்திரைநிலைக்கானஇந்த நூல்மூலம்,ஆதியோகப் பேரின்ப வாழ்வின் பன்னிரு படிநிலைகளின் நுட்பநெறி முறைகளைப் பயின்று, பழகி, மெய்ப்பாலறிந்து, பிறவிப் பயன் பெற்று வாழ்வாங்கு வாழ, ஆக்கமும்ஊக்கமும்அளித்துவழிகாட்டுகின்றதுஇந்தநூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆதியோகப் பேரின்ப வாழ்வு – நூல்: 3 (நிலை:3 -முத்திறமுத்திரைநிலை) யோகம்பழகும் நெறிமுறைகள்”

Your email address will not be published. Required fields are marked *

1
1
Your Cart
Blissful Life By Aadhiyoga- Book3 Grade – 3 (MTA Level - Mudra of Three Abilities) Methods of Practicing Yoga
Blissful Life By Aadhiyoga- Book3 Grade – 3 (MTA Level - Mudra of Three Abilities) Methods of Practicing Yoga Qty: 1
Price: Original price was: ₹600.00.Current price is: ₹566.00.
Save 34.00
566.00
Secure Checkout
Fast Shipping
Easy Returns
Scroll to Top