Sale!

ஆதியோகப் பேரின்ப வாழ்வு – நூல்: 2 (நிலை:2 முன்னோடி நிலை)

Original price was: ₹600.00.Current price is: ₹566.00.

தலைப்பு ஆதியோகப் பேரின்ப வாழ்வு – நூல்: 2 (நிலை:2 முன்னோடி நிலை)

யோகம்பழகும் நெறிமுறைகள்

ஆசிரியர்கள் ஆதிநாத பரமஹம்ஸர் மா
வகை யோகம் &தத்துவம்
பக்கங்கள் 192
பதிப்பு 1
ISBN 978-81-988402-7-1
வடிவம் Hard Back
மொழி தமிழ்
பதிப்பகம் அறந்தைதமிழ்ச் சங்கம்
Category:

ஆரோக்கியமும், ஆனந்தமும், வாழ்வாங்கு வாழ்வதற்குத் தேவையான அறிவும் இன்னும் இறைவனின் அருளும் அனைவருக்கும் தேவையான அடிப்படைத் தேவைகள்தான் என்பதை எல்லோரும்உணரவுணர்த்தி, நீங்களும் அவற்றை அடைய, இறையருள் துணையோடு ஆதியோகக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் அறந்தைதமிழ்ச்சங்கமும் முயன்றதன் விளைவே, உங்கள் கைகளுக்கு வந்த “ஆதியோகப்பேரின்பவாழ்வு”நூல்வரிசையின்இந்த இரண்டாம்நிலையாகியமுன்னோடிநிலைநூல்.

உடல், மனம், உயிர்மற்றும்ஆன்மாபற்றியஉண்மையையும்தெளிவையும்இந்தநூல்தாங்கிவருவதோடு, இவைபற்றியசரியான விளக்கம் வேண்டி மெய்யன்பர்கள் பலரால் விண்ணப்பிக்கப்பட்ட வினாக்களுக்கான விரிவான விடைகளில் சிலவற்றையும்தாங்கி, உங்களுடைய கனிந்த அன்பான கவனத்திற்கு மலர்த்தோட்ட மணம்போல வைரமணி வாசகங்களாய் அவைவார்க்கப்பட்டுஇதில்வழங்கப்பட்டுள்ளன.

இவை வழியாக வெளியாகும் மெய்ஞ்ஞான தேவ இரகசியங்கள் மற்றும்  மகரிஷிகள் அருளிய அரிய பல வழிகள் ஒவ்வொன்றும், உங்களுடைய முயற்சிகளைஊக்கப்படுத்தி, மேவும் தன்னம்பிக்கையை மிகவும் உறுதியாக்கி,   பலனை உச்சத்துக்குத் தரவல்லவை. இவை நிச்சயமாக நீங்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கு  வழிகாட்டி, உங்களைஉயர்நிலைக்கு அழைத்துச் செல்லுகின்ற ஒளிவிளக்குகளாகவும், உற்றுய்ய உதவும் ஒப்பற்ற ஊன்றுக்கோல்களாகவும் உள்ளன என்பதை  நீங்களும் விரைவில் உணர்ந்து கொள்வீர்கள்.

“சொரணை கெட்டு, அறிவற்றுப் பிதற்றுவது ஞானமாகாது. மேலும் மேலும் நாளுக்கு நாள் அறிவு கூரேறி ஒளிவாளாக ஆவதுவே ஞானம். எமன் எல்லையிலும் அஞ்சாமல் வீரம் பொழிய நிற்கச்செய்வதுவே ஞானம்.”என்றுசெய்வழிகாட்டிஉய்வழிகூட்டும்பிரம்மப்பிரகாசமெய்வழிச்சாலைஆண்டவர்கள்திருவேதம்உரக்கச்சொல்லுகின்றது.

ஞானம் பெறப்பெற அதோடு கூடவே  ஆரோக்கியமும் விளைந்து அதிகரிக்கும், மெய்ஞ்ஞானத்  தெளிவும்  மிகும். ஆரோக்கியம் என்பது  ஒருவரின் உடல் மனம் ஆன்மா முதலியவைகளோடும் பொருந்தக்கூடிய ஒன்று.

ஆகவே, மனித உடலை முதலாக வைத்து உடலிலும்,  அவ்வுடலையே  மூலமாக வைத்துப் பரிசுத்த நிலையைப் பெறும் மனதிலும், உடலும் மனமும் கடந்து ஆன்மாவிலும், ஒன்றைக் கடந்து ஒன்று என்ற உயர்நிலையில், மனம் மொழி மெய்களால் அனுபவிக்கும் இன்பம் கலந்த ஆனந்தமே உண்மையான ஆரோக்கியம் ஆகும்.

“நான் யார்? “என்பதை அறிந்து,  இறைவன் அல்லது இறைநிலையோடு கலந்து, ஆனந்தமும் பேரானந்தமும் அடைந்து அனுபவிக்கும் வழிமுறைகளை, “ஆதியோகப் பேரின்ப வாழ்வு” நூல் வரிசையின் முன்னோடிநிலைக்கானஇந்த நூல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆதியோகப் பேரின்ப வாழ்வு – நூல்: 2 (நிலை:2 முன்னோடி நிலை)”

Your email address will not be published. Required fields are marked *

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
Scroll to Top