Sale!

ஆதியோகப் பேரின்ப வாழ்வு – நூல்: 1 (நிலை: 1 அடிப்படைநிலை) யோகம்பழகும் நெறிமுறைகள்

Original price was: ₹600.00.Current price is: ₹566.00.

தலைப்பு ஆதியோகப் பேரின்ப வாழ்வு – நூல்: 1 (நிலை: 1 அடிப்படைநிலை)

யோகம்பழகும் நெறிமுறைகள்

ஆசிரியர்கள் ஆதிநாத பரமஹம்ஸர் மா
வகை யோகம் &தத்துவம்
பக்கங்கள் 192
பதிப்பு 1
ISBN 978-81-988402-6-4
வடிவம் Hard Back
மொழி தமிழ்
பதிப்பகம் அறந்தைதமிழ்ச் சங்கம்
Category:

 

அளவீந்து எம்மை அரசாளும் தேவே

உளம்வந்த மெய்ஞ்ஞான சம்பந்த நாதா

பழம்தந்து மெய்ம்மைப் பயன்தந்த வேதக்

கழல்சேர்த்துக் காக்கும்நா காப்பு.

 

பேரின்ப வாழ்வுநல்கப் பேணியீன்று தங்கிடச்

சேரிடமுஞ் சேர்த்தோதிச் சாவினைகள் வென்றிடும்

யாரிடமும் அன்பொழுகி ஒளடதத்தால் கூற்றதன்

கூரினைக்கொல் ஆதியோகம் இஃது.

ஆகிய பாடல்களோடும்…

 

ஆதிமுதல் அந்தம்வரை, மக்கள் எல்லோரையும் ஜென்ம சாபல்யர்களாக ஆக்கும் இறைவனின் இரக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காகவும், இறைவனின இச்சையாகிய இந்த உலகத்தை உய்விக்கும் பெருங்காரியத்திற்குத் திருத்தூதர்கள் துணைக் கருவிகளாக இருக்கவும், அருண்மணி கொழிக்கும் திருமறையாகிய வேதத்தை இந்நூல்வரிசை வரை இறக்கி உணர்த்தியும் ஓதி உணர்த்தியும் அருளிய ஆதிநாத வேதமான வேதக்கர்த்தர்கள், மெய்ஞ்ஞானப் பாரவான்கள், தீர்க்கத் தெரிசியர்கள், இறை தூதர்கள், இறைவாக்குரைஞர்கள்,  சித்தர் முத்தர்கள், தேவாதி தேவர்கள், பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்துமூன்று நாயன்மார்கள், திடஞானக் கொண்டல் வடலூர் பெருமானார், சமயக்குரவர்கள், பகவான் ஸ்ரீ இரமண மகரிஷி, பிரம்மப் பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் முதலிய அனைவரையும் நெஞ்சம் நெகிழ நினைந்து நினைந்து, கரமும் சிரமும் குவித்துத் தொழுது, போற்றி இறைஞ்சி அவர்களின் திருப்பாதத் தாமரைகளில் வணங்கி நமஸ்கரிக்கின்றேன்…

 

என்னும் நமஸ்காரத்தோடும்ஆரம்பமாகும் இந்த நூல் பேரின்பத்தை நாடுவோருக்குக் கிடைத்த பெரும்பாக்கியம் என்றால் அது மிகையன்று.

மெய்ப்பால் அறிந்தின்புற மெய்யன்புறும்  அனைவருக்கும்  சுயம்பிரகாச நித்திய ஆனந்த பிரம்ம சொரூபத்தின் அருண்மணி நிறைகுரு திருவருள் வரம்தரும் ஆசீர்பாதத்தைஆதியோகப் பேரின்ப வாழ்வு நூல் வரிசை வழியாக வாசகர்களைச் சந்தித்துவழங்குகிறார்ஆதிநாதபரமஹம்ஸர்அவர்கள்.

ஆரோக்கியம்,  சீரான நினைவாற்றல்,  பேரின்ப வாழ்வு ஆகிய அனைத்தையும் உங்கள் வாழ்வில் நீங்கள் பூரணமாகப் பெற வழிகாட்டும் இந்த நூலை உங்களின்  பூர்வஜென்ம புண்ணியத்தின் விளைவாகப் இந்தப் பிறவியின் பயனை அடையவே பெற்றுள்ளீர்கள்.  இதனால் பேரின்பம் அடைவது நம் பூர்வஜென்ம பந்தமும் ஜென்ம சாபல்யமுமாகும்.

இந்தப்பூமியில் ஓர் உயிர்ப்பொருள் வாழ்வதே பல சிக்கல்கள் நிறைந்த ஒரு செயலாக ஆகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், மனிதனாகப் பிறந்த  ஒருவர் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் வாழ்வதென்பது மிகப்பெரிய ஒரு  போராட்டம் தான் என்றால் அது மிகையாகாது.

உணவு, உடை, உறைவிடம் முதலியவைகள்தான் மக்களின் அடிப்படைத் தேவைகள் அல்லது அதிகபட்சத் தேவைகள் என்ற கருத்து பலருடைய ஆழ்மனதில் பதிந்தே விட்டது.

இந்த நிலை இருப்பினும் ஆரோக்கியமும், ஆனந்தமும், வாழ்வாங்கு வாழ்வதற்குத் தேவையான அறிவும் இன்னும் இறைவனின் அருளும் அனைவருக்கும் தேவையான அடிப்படைத் தேவைகள்தான் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

நீங்களும் அவற்றை அடைய, இறையருள் துணையோடு ஆதியோகக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் அறந்தைதமிழ்ச்சங்கமும் முயன்றதன் விளைவே, உங்கள் கைகளுக்கு வந்த “ஆதியோகப் பேரின்ப வாழ்வு” நூல் வரிசையின் அடிப்படைநிலைக்கானஇந்த நூல்.

“ஆதியோகப் பேரின்ப வாழ்வு” நூல் வரிசையின் அனைத்துப் பகுதிகளிலும் வெளியாகும், ஆரோக்கியம் நல்கும் ஆதியோகப்பயிற்சிகள் எல்லாம், பழகுவோரின் மனநலத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் அதிவிரைவில் மீட்டுருவாக்கம் செய்து மேம்படுத்துகின்றன.

தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட உலகிற் சிறந்த பல மொழிகளின்  இலக்கியங்களில் உணர்த்தப்படும் ஆன்மீகம், யோகம், மருத்துவம்  மற்றும் வாழ்வாங்கு வாழும் வையக வாழ்வு முதலியவை சார்ந்த மெய்யியல் உட்பொருள்களும், மானுட வாழ்வியல் உண்மைகளும் வேண்டுவன வேண்டுமாறு இங்கே விளக்கப்பட்டுள்ளன. படித்துப்பயன்பெறவேண்டியஅற்புதமானநூல் இது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆதியோகப் பேரின்ப வாழ்வு – நூல்: 1 (நிலை: 1 அடிப்படைநிலை) யோகம்பழகும் நெறிமுறைகள்”

Your email address will not be published. Required fields are marked *

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
Scroll to Top