6) முப்பத்தியாறு தத்துவக் கோட்பாடுகளையும், சிவராஜ யோகத்தின் உச்சத்தையும்தொடும் மிக நுட்பமான, அரிய அடுத்தவிளக்கமாக, மேதினியில் மக்கள்: ‘மே’ (அன்பு/மேன்மை) + ‘இல்’ (வீடு/இதயம்) + ‘தினி’ (செறிவூட்டுதல்). அன்பை இதயக் கோயிலில் செறிவூட்டி வாழும் தகுதியுடைய ‘மக்கள்’ என்னும் ஆறறிவுயிர்கள், ‘தன்’ (இறைவனின் வேதம்/நாதம்) என்னும் ஒலியோடு ஒன்றிணையும் தகுதி பெறுகின்றனர்…என்பதையும்,
7) ஏழு வித்தியாதத்துவக் கடன்:சைவ சித்தாந்த தத்துவப் படிவளர்ச்சியில், அசுத்த மாயையிலிருந்து தோன்றும்காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயைஆகிய ஏழும்‘வித்தியாதத்துவங்கள்’எனப்படும். ஆன்மா இவ்வுலகில் கர்ம வினைகளை நுகர்வதற்காக, இறைவன் இந்த ஏழு தத்துவங்களையும் ஒரு ‘கடன்’ போல (போக சாதனங்களாக) ஆன்மாவுக்குத் தந்து உதவுகிறான்…என்பதையும்,
8) ஏழு அறிவுநிலைகள் (ஞான பூமிகள்):இங்ஙனம் வித்தியாதத்துவங்களைப் பெற்றுப் பிறந்த ஆன்மா, உலக போகங்களில் மூழ்கிக் கிடக்காமல், ஞான மார்க்கத்தின் ஏழு அறிவுநிலைகளை (ஏழு ஞான பூமிகள்:சுபவிச்சை, விசாரணை, தனுமானசி, சத்துவாபத்தி, அசம்சக்தி, பதார்த்தாபாவனை, துரியகா) படிப்படியாகப் பெற்று, உலகியல் மாயையைக் கடந்து, மீண்டும் பிறவாத பேரின்ப நிலையை (ஜீவசமாதி/சாயுச்சியம்) நோக்கித் திரும்புகிறது என்பதையும் இவ்வரி மிக நுட்பமாக உணர்த்துகிறது.
9) இவ்வாறுஎல்லா விளக்கங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, இவ்வடியானது“ஆன்மா அசுத்த மாயையின் ஏழு கருவிகளைத் துணையாகக் கொண்டு மனிதப் பிறவி என்னும் பெரும்பயனை அடைந்து, அகத்தே தன் உண்மை நிலையை உணர்ந்து (ஆன்ம சுத்தி), இறுதியில் ஏழு ஞான பூமிகளின் வழியே ஏறிச் சென்று என்றும் உள்பொருளான சிவத்தோடு கலக்கிறது“என்ற உன்னத ஆன்மீகப் பயணத்தின் முழு வரைபடமாகத் திகழ்கிறது. (அடுத்தடுத்தஅடிகளின்பொருட்பெருமைகளைஅடுத்தப்பதிவில் காண்போம்)